/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டிராக்டர் மீது பைக் மோதி ஒருவர் பலி
/
டிராக்டர் மீது பைக் மோதி ஒருவர் பலி
ADDED : ஏப் 04, 2025 04:55 AM
சேத்தியாத்தோப்பு: வெள்ளாறு பாலத்தில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.
லால்பேட்டையில் இருந்து வைக்கோல் ஏற்றிக் கொண்டு வடலுார் நோக்கி நேற்று அதிகாலை டிராக்டர் சென்று கொண்டிருந்தது. சேத்தியாத்தோப்பு வெள்ளாறு பாலத்தில் வந்த போது, டீசல் இல்லாமல் டிராக்டர் நின்றது. அப்போது, அவ்வழியாக காவாலக்குடி ராஜேந்திரன் மகன் நடராஜன்,28; பாண்டியன்,55; ஆகியோர் வந்த பைக், டிராக்டரின் பின்னால் மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர்.
சேத்தியாத்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பலத்த காயமடைந்த நடராஜன், பாண்டியனை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நடராஜன் இறந்தார். பாண்டியன் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில், சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

