ADDED : ஜன 15, 2024 06:26 AM
அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி : அரசு பஸ் மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்தார்.
கடலூர்-விருத்தாச்சலம் சாலையில், சின்ன தோப்புக்கொல்லை கிராமம் அருகே 12ம் தேதி காலை 45 வயது மதிக்கத்தக்க நபர் சாலையை கடந்தார்.
அப்போது, விருத்தாசலம் நோக்கி வந்த அரசு பஸ் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்தவர் யார் என்ற விபரம் தெரியவில்லை.
இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
