தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது


UPDATED : அக் 21, 2026 07:28 PM

ADDED : அக் 21, 2026 07:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 07:28 PM ADDED : அக் 21, 2026 07:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ருட்டி: பண்ருட்டி அருகே நடந்த கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது குடும்பத்திற்கும், கீழ்கவரப்பட்டில் வசிக்கும் இவரது அக்கா கன்னியாகுமரி குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் 16 ம் தேதி மூர்த்தி மகன் விக்னேஷிற்கும், கன்னியாகுமரி மகன் தேவிற்கும் தகராறு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து விக்னேஷ் உள்ளிட்ட 5 பேர், கீழ்கவரப்பட்டில் உள்ள தனது அத்தை கன்னியாகுமரியிடம் நியாயம் கேட்கவே, இரு குடும்பத்திற்கும் தகராறு ஏற்பட்டது. அதனை தடுக்க முயன்ற கீழ்கவரப்பட்டு சேர்ந்த கண்ணன் மகன் ராமு,45;வை, விக்னேஷ் தரப்பினர் தாக்கியதில், அவர் இறந்தார்.

இதுகுறித்து பண்ருட்டி போலீசார், 7 பேர் மீது வழக்கு பதிந்து விக்னேஷ்,24; உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த ஸ்ரீதர்,25; என்பவரை நேற்று கைது செய்த, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us