நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி, டி.வி.எஸ்., மொபட்டில் சென்றவர் உயிரிழந்தார்.
நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் ரங்கநாதன், 54; இவர், நேற்று முன்தினம் மாலை டி.வி.எஸ்., மொபட்டில் சிலம்பிநாதன்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார்.
ஆராய்ச்சிக்குப்பம் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. விபத்தில் ரங்கநாதன் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.