நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே பைக் மோதியதில், ஒருவர் இறந்தார்.
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்தவர் சின்னராசு, 60; தவில் கலைஞர்.
இவர் கடந்த 1ம் தேதி வீட்டின் அருகில் மடுகரை சாலையில் உள்ள கோவிலில் திருவிழாவில் தவில் வாசிக்க நடந்து சென்றார்.
சிறிது துாரம் சென்றதும், எதிரில் வந்த பைக் மோதியதில் சின்னராசு பலத்த காயமடைந்தார். புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

