ADDED : டிச 16, 2025 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: டிராக்டர் மோதியதில் மொபெட்டில் சென்றவர் படுகாயமடைந்தார்.
குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர் காலனி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 56; இவர் நேற்று முன்தினம் தனது மொபட்டில் குள்ளஞ்சாவடி காட்டுக்கூடலுார் மெயின் ரோட்டிற்கு சென்றார்.
அப்போது எதிரே வந்த டிராக்டர் மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சக்திவேல் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

