/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தமிழகத்தில் தொடர் வெற்றி பெற்ற வரலாறு அ.தி.மு.க.,வுக்கு மட்டும் தான் உள்ளது சொரத்துார் ராஜேந்திரன் பேச்சு

ADDED : மார் 24, 2025 06:10 AM

கடலுார் : அ.தி.மு.க., கடலுார் தெற்கு மாவட்டம், மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி வாரியாக பாகக்கிளைப் பொறுப்பாளர்களை பார்வையிட்டு ஆய்வு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றிய செயலாளர் வினோத் முன்னிலை வகித்தார். அமைப்புச் செயலாளர்கள் கோபால், ராஜமாணிக்கம் ஆகியோர் பூத் வாரியாக பொறுப்பாளர்களை ஆய்வு செய்தனர்.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்தால் தான், ஜெ., காலத்தில் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் அனைத்தும் மீண்டும் நம்மை வந்து சேரும். தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் குறைந்தபட்ச பாதுகாப்பை கூட வழங்க இந்த அரசுக்கு தகுதி இல்லை.
தமிழ்நாட்டில் தினமும் நான்கு ஐந்து கொலைகள் நடக்கின்றன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக கெட்டுப் போயிருக்கிறது. அ.தி.மு.க., இயக்கத்தின்பால் ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக செயலாற்றினால் உங்களுக்கு வளமான எதிர்காலம் உண்டு. தமிழகத்தில் தொடர் வெற்றி பெற்ற வரலாறு அ.தி.மு.க., வுக்கு மட்டும் தான் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வர்த்தக பிரிவு செயலாளர் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர் பாஷ்யம், வடலுார் நகர செயலாளர் பாபு, திருமலைவாசன், அம்மா பேரவை செயலாளர் ஸ்ரீராம், மும்மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.