/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : நவ 18, 2024 06:50 AM

கடலுார் ; அரிசிக்கவுண்டன்பாளையம் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
பண்ருட்டி அடுத்த அரிசி்க்கவுண்டன்பாளையம் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 15ம் தேதி கோ பூஜை, தன பூஜை, அங்குரார்ப்பணம், யாக சாலை பூஜை நடந்தது.
நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது.
நேற்று காலை நான்காம் கால யாக பூஜை, நாடிசந்தானம், தத்வார்ச்சனை, கடம் புறப்பாடாகி கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.