ADDED : செப் 18, 2024 09:34 PM

அ நிறம் | அளவு
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு குறுக்குரோட்டில் எம்.எஸ்., பாலிகிளினிக் திறப்பு விழா நடந்தது.
டாக்டர் பாலகார்த்திக், பல்மருத்துவர் நிவேதினி தலைமை தாங்கினர். சேத்தியாத்தோப்பு முன்னாள் பேரூராட்சி தலைவர் பட்டுகணேசன், பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி முன்னிலை வகித்தார். வத்தராயன்தெத்து தலைமை ஆசியர் முத்துவடிராஜா வரவேற்றார்.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் மணிவாசகன், மருத்துவமனையை திறந்து வைத்தார். மயிலாடுதுறை வட்டாரக்கல்வி அலுவலர் ஜானகி குத்துவிளக்கேற்றி, 24 மணிநேர மருத்துவ சேவையை துவக்கி வைத்தார்.
விழாவில் புவனகிரி, கீரப்பாளையம் ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், உறவினர்கள் கலந்துகொண்டனர்.
