நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரத்தில் தில்லை ஈரடிப் பேரவை துவக்க விழா நடந்தது.
பாலசுந்தரம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் புகழேந்தி வரவேற்றார். ஜெயராமன், பொன்னம்பலம், டாக்டர் பிருந்தா அருள்மொழிசெல்வன், பாரதி பள்ளி நிறுவனர் அன்பழகன், ராகவன் குத்துவிளக்கேற்றினர்.
தமிழ்ச் சங்க சாசனத் தலைவர் திருநாவுக்கரசு திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்தார். ஆடிட்டர் நடராஜன், அருள்மொழிசெல்வன், ஆறுமுகம், கீர்த்தனா, முன்னாள் கல்லுாரி முதல்வர் சிவசந்திரன் வாழ்த்திப் பேசினார்.
பரந்தாமன் நன்றி கூறினார்.