/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உலகத் திருமறை திருக்குறள் வாசக திறப்பு விழா
/
உலகத் திருமறை திருக்குறள் வாசக திறப்பு விழா
ADDED : நவ 18, 2024 07:48 PM

கடலுார்; கடலுாரில் மாநகராட்சி வரி, வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் நுகர்வோர்கள் நல சங்கம் சார்பில் உலக திருமறை திருக்குறள் வாசக திறப்பு விழா நடந்தது.
மாநகராட்சி வரி ,வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் நுகர்வோர்கள் நல சங்கத் தலைவர் போஸ் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
எஸ்.பி., ராஜாராம், உலக திருமறை திருக்குறள் வாசக திறப்பு திறந்து வைத்து சிறப்புரையாற்றனார். மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சங்க சட்ட ஆலோசகர்கள் தமிழரசன், சந்திரசேகரன் மற்றும் வேலுமணி, அன்பன் சிவா வாழ்த்துரை வழங்கினர்.
அப்போது, செயலாளர் பாலசுந்தரம், பொருளாளர் தண்டபாணி, சங்கர், ஆசிரியர் அருள்ஜோதி, துணைத் தலைவர் முகுந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

