ADDED : பிப் 04, 2024 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி : கிருஷ்ணன்குப்பம்ஊராட்சியில் புதிய சுகாதாரமையம் திறக்கப்பட்டது.
குள்ளஞ்சாவடி அடுத்த கிருஷ்ணன்குப்பம் ஊராட்சி, கட்டியங்குப்பம் பகுதியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. அதனை, அமைச்சர்கள் சுப்ரமணியம் காணொலி மூலம் திறந்து வைத்தார். அதையொட்டி, கிருஷ்ணன்குப்பத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். குள்ளஞ்சாவடி அரசு மருத்துவ அலுவலர் ரேவதி மணிபாலன், புதிய கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பகுதி சுகாதார செவிலியர் சுமதி, கிராம சுகாதார செவிலியர் அஞ்சலி, சுகாதார ஆய்வாளர் தேவானந்த் உள்ளிட்டோர்உடனிருந்தனர்.