/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய ரேஷன் கடை எம்.எல்.ஏ., திறப்பு
/
புதிய ரேஷன் கடை எம்.எல்.ஏ., திறப்பு
ADDED : அக் 05, 2024 11:25 PM

நெய்வேலி: நெய்வேலி அடுத்துள்ள சந்தைவெளிப்பேட்டை கிராமத்தில் புதிய ரேஷன் கடையை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
வடக்குத்து ஊராட்சிட்குட்பட்ட சந்தைவெளிப்பேட்டை கிராமத்தில் ரேஷன் கடை கேட்டு, கிராம மக்கள் சபா ராஜேந்திரன் எம்.எல்..ஏ.,விடம் முறையிட்டனர்.
இதையடுதது ரூ. 8.50 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது.
அக்கட்டத்தை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., திறந்து வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க., குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் குணசேகரன், அவைத் தலைவர் வீர ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், துணைச் செயலாளர் ஏழுமலை, வடக்குத்து ஊராட்சி தலைவர் அஞ்சலை குப்புசாமி, துணைத் தலைவர் சடையப்பன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் கல்யாண சுந்தரம், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் பாக்கியலட்சுமி, கூட்டுறவு சங்க செயலாளர் குமுதவல்லி பங்கேற்றனர்.