ADDED : ஏப் 04, 2025 04:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் தற்காலிக கடைகள் திறப்பு விழா நடந்தது.
நெல்லிக்குப்பம் ஆலை ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கடைகளை இடித்து விட்டு புதியதாக கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் 1 கோடியே 75 லட்சம் மதிப்பில் 18 கடைகள் கட்ட டெண்டர் விடப்பட்டது.
ஆலை ரோட்டில் பழைய கடைகளை இடித்து அகற்றும் பணி நேற்று துவங்கியது. இங்குள்ள காய்கறிகள் வியாபாரிகளுக்கு தற்காலிமாக 12 கடைகள் கட்டப்பட்டுள்ளது.
இதனை நகராட்சி துணை சேர்மன் கிரிஜா திறந்து வைத்தார். கமிஷனர் கிருஷ்ணராஜன், தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் வியாபாரிகளிடம் சாவியை ஒப்படைத்தனர்.

