/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் நகராட்சியில் தச்சன் குளம் திறப்பு
/
சிதம்பரம் நகராட்சியில் தச்சன் குளம் திறப்பு
ADDED : ஜூன் 29, 2025 06:56 AM

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சியில் சீரமைக்கப்பட்ட தச்சன் குளத்தை சேர்மன் செந்தில்குமார் திறந்து வைத்தார்.
சிதம்பரம் நகராட்சி, மந்தக்கரையில் உள்ள தச்சன் குளம் பாழடைந்த நிலையில், இருந்த இடமே தெரியாமல் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் 95 லட்சம் ரூபாய் மதிப்பில் துார்வாரப்பட்டு நடைபாதை வசதி செய்யப்பட்டது. குளம் திறப்பு விழாவில், சேர்மன் செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
விழாவில், நகராட்சி கமிஷனர் மல்லிகா, இன்ஜினியர் சுரேஷ், துணை சேர்மன் முத்துக்குமரன், கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகர், இந்துமதி அருள், மணிகண்டன், அசோகன், சரவணன், தில்லை மக்கின், தி.மு.க., நகர துணை செயலாளர்கள் பாலசுப்ரமணியன், இளங்கோவன், தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர், இளைஞரணி அமைப்பாளர் அருள், தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்க மாநில தலைவர் சேகர், ராமச்சந்திரன், கனகசபை உட்பட பலர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, கனகசபை நகரில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தையும் திறந்து வைத்தார்.