/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வரதராஜபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
/
வரதராஜபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
ADDED : ஜன 11, 2025 04:55 AM
விருத்தாசலம்,: விருத்தாசலம் அடுத்த மு.பரூர் வரதராஜபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, நேற்று அதிகாலை 3:00 மணியளவில் திருப்பள்ளி எழுச்சி, விஸ்வரூப தரிசனம், அதிகாலை 3:45 மணியளவில் சுவாமி புறப்பாடு நடந்தது. அதைத்தொடர்ந்து, அதிகாலை 4:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிழகழ்ச்சி நடந்தது.
இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதேபோல், விருத்தாசலம் பெரியார்நகர் ராஜகோபால சுவாமி கோவில் நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

