/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சமூகநீதி மாணவர்கள் நல விடுதி திறப்பு
/
சமூகநீதி மாணவர்கள் நல விடுதி திறப்பு
ADDED : அக் 07, 2025 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சியில் திறக்கப்பட்டுள்ள சமூகநீதி மாணவர்கள் விடுதி கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கப்பட்டது.
சேத்தியாத்தோப்பில் தமிழக அரசின் தாட்கோ நிதி 2.70 கோடி மதிப்பில் சமூகநீதி மாணவர்கள் நலவிடுதி கட்டப்பட்டது. இதனை முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனையொட்டி சமூகநீதி மாணவர்கள் விடுதியில் நடந்த நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் தங்ககுலோத்துங்கன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றினார்.
தாட்கோ செயற்பொறியாளர் அன்புசாந்தி, உதவி பொறியாளர் ஜெயலட்சுமி, விடுதி காப்பாளர் விவேகன், அரசு ஒப்பந்ததாரர் சிவக்குமார் உடனிருந்தனர்.