/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிளியனுார் ஊராட்சியில் காத்திருப்போர் கூடம் திறப்பு
/
கிளியனுார் ஊராட்சியில் காத்திருப்போர் கூடம் திறப்பு
கிளியனுார் ஊராட்சியில் காத்திருப்போர் கூடம் திறப்பு
கிளியனுார் ஊராட்சியில் காத்திருப்போர் கூடம் திறப்பு
ADDED : அக் 27, 2024 06:12 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த கிளியனுார் ஊராட்சியில் புவனகிரி தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள காத்திருப்போர் கூடம் திறப்பு விழா நடந்தது.
புவனகிரி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 6 லட்சம் ரூபாய் மதிப்பில் கீரப்பாளையம் ஒன்றியம் கிளியனுார் ஊராட்சியில் கட்டப்பட்டது.
அதன் திறப்பு விழாவில் அ.தி.மு.க., கீரப்பாளையம் மேற்கு செயலாளர் கருப்பன் தலைமை தாங்கினார்.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாணவரணி தலைவர் வீரமூர்த்தி, ஊராட்சி தலைவர் சத்தியா வைரமணி, ஒன்றிய அவைத்தலைவர் ராமராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் கமலக்கண்ணன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அய்யாதுரை முன்னிலை வகித்தனர்.
அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., காத்திருப்போர் கூடத்தை திறந்து வைத்ததார்.