/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
3,500 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை
/
3,500 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை
ADDED : டிச 17, 2024 06:40 AM
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் முதற்கட்டமாக, கனவு இல்லம் திட்டத்தில், 3,500 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கலைஞரின் கனவு இல்லம் எனும் திட்டத்தில், குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தரும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடலுார் மாவட்டத்தில் 58,710 குடிசை வீடுகள் உள்ளன. சொந்த இடம் உள்ள பயனாளிகளுக்கு முன்னிரிமை அடிப்படையில் வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தகுதியான குடும்பங்களில் பட்டா இல்லாத பயனாளிகளுக்கு உடனடியாக பட்டா வழங்கி, அந்த பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்து, குடிசை இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வீடுகட்ட குறைந்தபட்ச பரப்பளவு சமையலறை உட்பட 360 சதுர அடியாக இருக்க வேண்டும். அதில் 300 சதுர அடி ஆர்சிசி கூரை, மீதமுள்ள 60 சதுர அடி பயனாளியின் விருப்பப்படி எரியாத பொருள்கொண்ட மற்ற வகை கூரையாக அமைக்கலாம்.
இத்திட்டத்தில் வீடு கட்டுவதற்கு ஒரு பயனாளிக்கு 3.50 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
கடலுார் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு மொத்தம் 3,500 பயனாளிகளுக்கு முதற்கட்டமாக ஆணை வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.