/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆதிவராகநல்லுாரில் பஸ்களை நிறுத்த உத்தரவு
/
ஆதிவராகநல்லுாரில் பஸ்களை நிறுத்த உத்தரவு
ADDED : செப் 19, 2024 11:49 PM

புவனகிரி: புவனகிரி ஆதிவராகநல்லூரில் அனைத்து பஸ்களையும் நிறுத்தி பொதுமக்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என, வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
புவனகிரி அடுத்த ஆதிவராகநல்லுாரில் பஸ் நிறுத்தத்தில், அரசு டவுன் பஸ்களை தவிர்த்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்துவதில்லை. இதனால் பள்ளி கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுகுறித்து சுற்றுப்பகுதி பொதுமக்கள் தன்னார்வ அமைப்பினர், சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
அதையடுத்து, நேற்று வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், ஆய்வாளர் விமலா, புவனகிரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆதிவராகநத்தம் பஸ் நிறுத்தம் அருகே வந்து, அந்த வழியாக சென்ற பஸ்களை நிறுத்தி, இனி, ஆதிவராகநல்லுார் பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என, உத்தரவிட்டனர். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். அப்போது நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜெகன், ஊராட்சி தலைவர் ஜோதிநாகலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் கலைவாணி, ஜமாத் நிர்வாகி முகம்மது ஷாஜகான் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.