ADDED : ஜூலை 02, 2026 03:07 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் இயற்கை விவசாயம் குறித்த உள்வளாக பயிற்சி நடந்தது.
வேளாண் அறிவியல் நிலைய தலைவர் நடராஜன் தலைமை தாங்கி, பயிற்சியை துவக்கி வைத்தார். அதன்பின், இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.
விதை நுட்பவியல் துறை முனைவர் சத்தியநாரயணன் மண்வளம், இயற்கை உரங்களான அசோலா, நீலபசும்பாசி, பஞ்சகாவ்யா, ஜீ வாமீர்தம், கன ஜீவாமீர்தம் அதன் முக்கியத்துவம் மற்றும் இயற்கை முறையில் பூச்சி நோய் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.
உழவியல் துறை முனைவர் கலைச்செல்வி இயற்கை முறையில் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார்.
இயற்கை விவசாயி தமிழரசி இயற்கை விவசாயத்தில் தனது அனுபவம் குறித்து விவசாயிகளிடம் பகிர்ந்து கொண்டார். இதில், மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
