தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நம்ம பள்ளி நம்ம வாத்தியார்...

நம்ம பள்ளி நம்ம வாத்தியார்...

நம்ம பள்ளி நம்ம வாத்தியார்...


ADDED : ஆக 15, 2026 04:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2026 04:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்வியுடன் அன்பையும், ஒழுக்கத்தையும் கற்பிக்கிறோம்*டேனிஷ்மிஷன் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பளீச்...

15.08.2026: ‘கல்வியுடன் அன்பையும், ஒழுக்கத்தையும் மாணவர்களிடம் கற்பித்து வருகிறோம்’ என விருத்தாசலம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பெருமையுடன் தெரிவித்தனர்.

விருத்தாசலம் புதுக்குப்பம் டேனிஷ்மிஷன் மேல்நிலைப் பள்ளியில், 6 முதல் பிளஸ் 2 வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் பிரேம்குமார் வழிகாட்டுதலுடன் ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுடன் இணக்கமாக, அவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் கற்பித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் பயின்ற பல மாணவர்கள் சாதனையாளர்களாக தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு முன்னேற்றமடைந்த முன்னாள் மாணவர்கள் பலரும், இன்றும் பள்ளி நிர்வாகத்துடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் முன்னாள் மாணவர்கள் சங்கம் என்ற பெயரில் பள்ளிக்கு தேவையான உதவிகளையும் வாரி வழங்குகின்றனர்.

ஆசிரியர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், கல்வியுடன் அன்பையும், ஒழுக்கத்தையும் மாணவர்களிடம் கற்பித்து வருகிறோம் என பெருமிதத்துடன் கூறினர்.

முனைவர் வி.எம்.பிரேம்குமார், தலைமை ஆசிரியர்.

கடந்த 2008ம் ஆண்டு முதல் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். 2017ல் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக தொடர்கிறேன். பள்ளியின் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றதில் இருந்து, பள்ளிக்கு சுற்றுச்சுவர், ஆழ்துளை கிணறு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மாணவிகளுக்கு நவீன வசதியுடன் கழிவறை, கலையரங்கம், ஸ்மார்ட் கிளாஸ், ஆண் ஆசிரியர்கள் கழிவறை, பள்ளி முழுவதும் வர்ணம் பூசுதல் என சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தும், இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வாயிலாகவும் செய்து கொடுத்துள்ளேன்.

நான் பொறுப்பேற்றதில் இருந்து 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகளில் தொடர்ச்சியாக 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்து வருகிறேன். கொரோனா பேரிடர் காலத்திலும் பொது மக்களுக்கு எண்ணற்ற சமூக நலப்பணிகள் செய்துள்ளேன். எனது கல்வி மற்றும் சமூக பணிகளை அங்கீகரிக்கும் வகையில், கடந்த கல்வியாண்டில் தமிழக அரசு நல்லாசிரியர் விருதான டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கவுரவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

மா.ஆல்பர்ட் வில்சன் தாமஸ், தமிழாசிரியர்

36 ஆண்டு காலம் இதே பள்ளியில் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறேன். 20 ஆண்டு காலம் பள்ளியில் ஆசிரியர் சங்கத் தலைவராகவும், தொடர்ந்து உறுப்பினராகவும் உள்ளேன். இப்பள்ளியில் எனது பணி காலத்தில் பணியாற்றிய தலைமை ஆசிரியர்களுடன் சேர்ந்து பள்ளியில் கட்டப்பட்ட, உருவாக்கப்பட்ட அனைத்து கட்டடப் பணிகளிலும், நான் கன்வீனராக இருந்து சிறப்பாக பணிபுரிந்துள்ளேன்.

பள்ளி விழாக்கள், அரசு விழாக்கள் அனைத்திலும் முன்நின்று சிறப்பாக நடத்தி முடித்து, மாணவர்கள் வெற்றி பெற துணையாக இருந்துள்ளேன். மேலும், பள்ளி மாணவர்களுக்கு  நல் ஒழுக்கமே தலையாய  மாண்பு  என்று கூறி, அதையே என் வாழ்வின் கடமையாக நினைத்து செயல்படுத்தி வருகின்றேன். மேலும், எனது பாடத்தில் என் வகுப்புகளில் தொடர்ச்சியாக 100 சதவீதம், குறைந்தபட்சம் 98 சதவீதம் தேர்ச்சி கொடுத்து வருகிறேன்.

மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வி வளர்ச்சிக்கும், பள்ளியின் வளர்ச்சிக்கும் எனது பணி ஓய்வு காலம் வரை அயராது உழைப்பேன்.z

F.ஜாஸ்மின் ஷீபா, உதவி தலைமை ஆசிரியர்.

கடந்த 2003ம் ஆண்டு முதல், 23 ஆண்டுகளாக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.  இப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியராகவும் உள்ளேன். கடந்த 5 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், அறிவியல் பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் கூறுகிறேன். பெற்றோர் மகிழ்ச்சியடையும் வகையில், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற அயராது பாடுபடுகிறேன்.

ஜே.ஜான் பிராங்ளின் அருள்தாஸ், பட்டதாரி ஆசிரியர் அறிவியல்.

2005 முதல் 2017 வரை, கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, கரியாலுார் டேனிஷ்மிஷன் மேல்நிலைப் பள்ளியில்  12 ஆண்டுகள் பணிபுரிந்தேன். அங்கு, மலைவாழ் மாணவர்களின் கல்வித்தரம் உயர வேண்டும் என மிகவும் உறுதியாக இருந்தேன். பின்னர், 2017 முதல் இப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன்.

இப்பள்ளியில் கற்பித்தலில் புதுமை என்ற இலக்கோடு நவீன ஸ்மார்ட் கிளாஸ் மூலமாக மாணவர்களுக்கு காட்சியோடு கூடிய கல்வியை அளித்து வருகிறேன். மேலும், பள்ளியின் சத்துணவு பொறுப்பாசிரியராக தினமும் உணவினை சோதித்த பிறகே, மாணவர்களுக்கு வழங்கும் பணியை செய்து வருகிறேன். கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து 10ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்து வருகிறேன். என்னுடைய பணிக்காலம் முழுவதும் மாணவர்களின் கல்வித்தரம் உயர பாடுபடுவேன்.

எ.ராபர்ட் பிராங்கிளின், அறிவியல் பட்டதாரி ஆசிரியர்

2003ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறேன். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் பாடத்தில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்துள்ளேன். மேலும், பள்ளியில் மாணவர்  சேர்க்கைக்குழு மற்றும் 2 ஆண்டுகள் பள்ளியின் பொருளாளராக சிறப்பான முறையில் பணியாற்றி உள்ளேன். பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கவும், பள்ளியின் வளர்ச்சியிலும் என்னால் இயன்ற அனைத்து பணிகளையும் செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us