/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரி பகுதியில் நடவுப்பணியில் வெளி மாநில ஆண் தொழிலாளர்கள்
/
புவனகிரி பகுதியில் நடவுப்பணியில் வெளி மாநில ஆண் தொழிலாளர்கள்
புவனகிரி பகுதியில் நடவுப்பணியில் வெளி மாநில ஆண் தொழிலாளர்கள்
புவனகிரி பகுதியில் நடவுப்பணியில் வெளி மாநில ஆண் தொழிலாளர்கள்
ADDED : அக் 17, 2024 12:31 AM

புவனகிரி: புவனகிரி பகுதிகளில் வெளிமாநில ஆண் தொழிலாளர்கள் மூலம் நடவு பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் விவசாய பணிக்கு ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் விவசாய பணிக்கு இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். சில சமயங்களில் வேளாண் இயந்திரங்களும் கிடைக்காத நிலை உள்ளது.
இந்த சூழலில் விவசாயப் பணிகளை செய்ய, வெளி மாநில ஆண் தொழிலாளர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். இவர்கள் குறைந்த கூலியில், குறித்த நேரத்தில் பணிகளை முடிக்கின்றனர். அதனால் பெரும்பாலான கிராமங்களில் விவசாய பணிக்கு வெளிமாநில தொழிலாளர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. புவனகிரி தாலுகாவில் நேற்று மருதுார் பகுதியில் நெல் நாற்று பறித்து நடவுப்பணியில் ஆந்திர மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இதுகுறித்து முன்னோடி விவசாய ஒருவர் கூறுகையில், 'ஒரு ஏக்கருக்கு ரூ.4200 செலவில் நாற்றை பறித்து, வயலிற்கு எடுத்துச் சென்று நடவை முடித்து கொடுக்கின்றனர். 15 பேர் கொண்ட குழுவினர் ஒரே நாளில் 5 ஏக்கரில் நடவுப்பணிகளை முடிக்கின்றனர். ஆனால் உள்ளூர் தொழிலாளர்கள் அதிக கூலி கேட்கின்றனர். அதே சமயத்தில் வெளி மாநல தொழிலாளிகள் கடினமாக உழைத்து, பணியை சீக்கிரம் முடித்து விடுகின்றனர்' என்றார்.