/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலூர் மாவட்டத்தில் அம்மை நோய் பரவல்: சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கை தேவை
/
கடலூர் மாவட்டத்தில் அம்மை நோய் பரவல்: சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கை தேவை
கடலூர் மாவட்டத்தில் அம்மை நோய் பரவல்: சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கை தேவை
கடலூர் மாவட்டத்தில் அம்மை நோய் பரவல்: சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கை தேவை
ADDED : பிப் 19, 2024 05:50 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பரவி வரும் அம்மை நோயை கட்டுப்படுத்திட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலுார் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அதிகாலை நேரங்களில் கடுமையான பனி பொழிவும், பகலில் கடும் வெயிலின் தாக்கமும் காணப்படுகிறது. கோடை காலம் துவங்கும் முன்பே மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. இதனால், இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்குக் கூடும்.
இதனிடையே மாவட்டத்தில் பரவலாக அம்மை நோய் தாக்குதல் ஏற்பட்டு வருகிறது. காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதிகளில் சின்னம்மை நோய் பரவல் உள்ளது. அதே போல், நெல்லிக்குப்பம் பகுதியில் தொண்டை அடைப்பான் எனப்படும் புட்டாளம்மை நோய் (பொன்னுக்கு வீங்கி) தாக்குதலால் சிறுவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொன்னுக்கு வீங்கி என்பது ஒருவித வைரஸ் தொற்று ஆகும்.
வழக்கமாக அம்மை நோய் தாக்குதல் கடும் வெயில் காலங்களில் தான் ஏற்படும். இது அருகில் உள்ளவர்களுக்கு வேகமாக பரவக்கூடியது.
அம்மை நோய் அறிகுறியாக ஜூரம், தலை வலி, உடல் வலி, உடல் சோர்வு போன்றவை ஏற்படும். பின்னர் ஜூரம் அதிகரித்து உடலில் சிறு சிறு கொப்பளங்கள் உருவாகும்.
நெல்லிக்குப்பம் பகுதியில் 12 குழந்தைகளுக்கு புட்டாளம்மை நோய் (பொன்னுக்கு வீங்கி) தாக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திப்பட்டுள்ளனர். மேலும் காட்டுமன்னார்கோவில், குமராட்சி கிராம பகுதிகளில் சின்னம்மை நோய் தாக்கம் காணப்படுகிறது.
கோடை வெயில் துவங்கும் முன்னரே அம்மை நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அம்மை நோய் தாக்குதல் அதிகம் ஏற்படும் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகம் அம்மை நோய் தாக்கிய பகுதிகளை பார்வையிட்டு தடுக்கும் வகையில் தடுப்பூசி முகாம் மற்றும் கிராம பகுதிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

