ADDED : ஆக 31, 2025 07:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் :பெண்ணாடம் அடுத்த பெ.பூவனுார் மாரியம்மன் கோவில் அருகே 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
பராமரிப்பின்றி நீர்தேக்கத் தொட்டி மேற்கூரையில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. இதனால் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத சூழல் உள்ளது.
பழுதான குடிநீர் தொட்டியை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.