UPDATED : செப் 24, 2026 03:24 PM
ADDED : செப் 24, 2026 03:23 PM
அ நிறம் | அளவு
சிறுபாக்கம்:சிறுபாக்கம் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, சிறுபாக்கம் த.வெ.க., ஊராட்சி செயலர் முருகேசன் தலைமை தாங்கினார். நெல் கொள்முதல் நிலைய அலுவலர்கள் இளங்கோவன், ஏழுமலை முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் மனோகரன் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். விவசாயிகள் பிரகாசம், ஜெய்சங்கர், சுப்ரமணியன், மணிவேல், அருள்ஜோதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
