ADDED : ஜன 24, 2025 06:14 AM
அ நிறம் | அளவு
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது.
கொள்முதல் நிலைய எழுத்தர் கணபதி தலைமை தாங்கினார். முன்னோடி விவசாயிகள் பாபு, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். கொள்முதல் நிலைய உதவியாளர் கவிதா, விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில், பெண்ணாடம், திருமலை அகரம் பகுதியில் அறுவடை செய்த சம்பா நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன.
