ADDED : ஆக 31, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
கிள்ளை: குடும்ப பிரச்சனை காரணமாக பெயிண்டர் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
கிள்ளை அடுத்த மடுவங்கரையை சேர்ந்தவர் தெய்வீகன்,42; பெயிண்டர். இவரது, மனைவி ஜெனிதா. இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. அதில் மனமுடைந்த தெய்வீகன், வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அதனைக் கண்டு திடுக்கிட்ட குடும்பத்தார், அவரை காப்பாற்றி, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதுகுறித்து, அவரது மகன் தினேஷ்குமார், கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
