தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஓவிய பயிற்சி முகாம்

 ஓவிய பயிற்சி முகாம்

 ஓவிய பயிற்சி முகாம்


ADDED : மார் 11, 2026 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 04:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டுத்துறை மற்றும் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் உலக ஓவிய தின விழாவையொட்டி பயிற்சி முகாம் நடந்தது.

கடலுாரில் நடந்த முகாமை, மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் ராஜாராமன் துவக்கி வைத்தார்.

ஓவிய பயிற்சி பெற்ற மாணவர்களின் ஓவியங்கள், கண்காட்சியாக வைக்கப்பட்டன.

இந்த கண்காட்சியை டி.எஸ்.பி., தமிழ் இனியன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

திட்ட அலுவலர் ரிமன் ராஜ், குரலிசை ஆசிரியர்கள் சாந்தி, விஜயஸ்ரீ, பரதநாட்டிய ஆசிரியர்கள் வள்ளி, ஹேமா மஞ்சுளா, சிலம்பம் ஆசிரியர்கள் ரகுநாத், குணசேகரன் மற்றும் மனோகரன், கீதா ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்தனர். பயிற்சியில் கடலுார் மாவட்டத்தை சேர்ந்த, 5 வயது முதல் 16 வயது வரையிலான, 220 மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us