/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்டாலினை அடுத்து பழனிசாமி வருகை: சிதம்பரத்தில் சூடு பிடித்தது தேர்தல் களம்
/
ஸ்டாலினை அடுத்து பழனிசாமி வருகை: சிதம்பரத்தில் சூடு பிடித்தது தேர்தல் களம்
ஸ்டாலினை அடுத்து பழனிசாமி வருகை: சிதம்பரத்தில் சூடு பிடித்தது தேர்தல் களம்
ஸ்டாலினை அடுத்து பழனிசாமி வருகை: சிதம்பரத்தில் சூடு பிடித்தது தேர்தல் களம்
ADDED : ஜூலை 23, 2025 12:15 PM
வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சியான தி.மு.க., தேர்தல் பணிகளை துவங்கி விட்டனர். குறிப்பாக, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை முடுக்கி விட்டு, அடுத்தடுத்து தேர்தலுக்கான உத்தரவுகளை பிறப்பித்து தேர்தல் பணியாற்ற வைத்துள்ளனர்.
குறிப்பாக, சிதம்பரத்தில், இளையபெருமாள் நுாற்றாண்டு கட்டடம் மற்றும் அவரது சிலை சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலின், தேர்தலை முன்னெடுக்கும் விதமாக, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை துவங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். அரசு விழா என்றாலும், ரோடு ேஷா நடத்தி மக்களை சந்தித்தார்.
தி.மு.க., வின் இந்த வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, 'தமிழகத்தை மீட்போம்; மக்களைக் காப்போம்' என்ற தலைப்பில், சூறாவளி சுற்றுப்பயணத்தை துவங்கி தி.மு.க., அரசை கடுமையாக சாடி வருகிறார்.
கடலுார், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்தும், பிரசாரம் செய்தார்.
சிதம்பரம் நகரில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து மக்களை சந்தித்தார். அடுத்த நாளே அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி சிதம்பரத்தில் முகாமிட்டு நடைபயணத்தின் மூலம் மக்களை சந்தித்தார்.
இந்த நிகழ்வால் தற்போதே 2026ம் ஆண்டு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது என அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகி விட்டது.