ADDED : மார் 05, 2024 05:54 AM

அ நிறம் | அளவு
கடலுார்: நெல்லிக்குப்பம் அடுத்த கீழக்குப்பம் பல்லவா சர்வதேச பள்ளி ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் சிவக்குமார் தலைமை தாங்கி னார். மாணவி திவ்யா வரவேற்றார்.
முதல்வர் மோகன், தலைமை விருந்தினர் சீனு செந்தாமரை, சிறப்பு விருந்தினர்கள் ஆசிரியர் ரமணன், சி.கே.பொறியியல் கல்லுாரி தண்டபாணி ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.
போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
2050ம் ஆண்டு உலகம் எப்படி இருக்கும் என்ற தொலைநோக்கு பார்வையில் நடனம், நாடகம், பாடல், மவுன நாடகம், தற்காப்பு கலை என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
மாணவர் புவனேஷ்வரன் நன்றி கூறினார்.
