ADDED : ஏப் 26, 2026 09:19 PM

கடலுார்: கோடை வெப்பத்தை தணிக்கும், பனை ஓலை விசிறி தயாரிப்பு தீவிரம் அடைந்துள்ளது.
கடலுார் மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்துவதால் மக்கள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். மின்விசிறிகளை பயன்படுத்தினாலும் அனல் காற்று வீசுகிறது. இதற்கிடையே, கடலுார் அடுத்த அன்னவல்லியில் பனை ஓலை விசிறிகளை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து விசிறி தொழிலாளி மனோகரன் கூறுகையில், ' கோடை வெப்பத்தை தணிக்க மக்கள் பனை ஓலை விசிறிகளை பயன்படுத்துவது வழக்கம். விசிறிகளை தயார் செய்வதற்கான பனை ஓலைகளை சித்திரைப்பேட்டை, சாமியார்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கடற்கரையோர கிராமங்களில் இருந்து வாங்கி வருகிறோம்.
பின், பனை ஓலைகளை வெட்டி காய வைத்து வர்ணம் பூசி காய்ந்ததும் விசிறி செய்யப்படும். பல தலைமுறைகளாக இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோம். கோடை காலத்தில் பனை ஓலை விசிறிகளுக்கு கிராக்கி ஏற்படும். உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். உள்ளூர் மக்களும் விரும்பி வாங்கி செல்கின்றனர்' என்றார்.
