ADDED : அக் 21, 2024 06:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி ஒன்றியம் அழிச்சிகுடி ஊராட்சியில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது.
புவனகிரி அடுத்த அழிச்சிக்குடியில் நடத்தி நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் அமிர்தவள்ளி கலிமூர்த்தி தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் இளையராஜா, ஆத்ம திட்ட இயக்குனர் சாரங்கபாணி முன்னிலை வகித்தனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் சாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பனை விதை நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.

