
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1982 - 83ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில், ஆலிச்சிகுடி கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் பனை விதைகள் நடும் விழா நடந்தது.
ஊராட்சி தலைவர் சின்னப்பிள்ளை பெருமாள் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் பழனிவேல், கவுன்சிலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரி உரிமையாளரும், முன்னாள் மாணவருமான ரமேஷ் சந்த் வரவேற்றார்.
ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பனை விதைகள் நடும் விழாவை துவக்கி வைத்தார். முன்னாள் மாணவர் ரபீக் முகம்மது, இயற்கை விவசாயி சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னாள் மாணவர்கள் கந்தவேல், ரமேஷ், ஆனந்த கோபால், கனகசபை, ஆசிரியர்கள் பிரபாகரன், அறிவழகன், கண்ணன், ராஜகோபால், சுவாமிநாதன், செல்வவிநாயகம் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த விழாவில், 10 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. முன்னாள் மாணவர், நல்லாசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

