/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பனை விதை நடும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
பனை விதை நடும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
பனை விதை நடும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
பனை விதை நடும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : அக் 07, 2024 06:55 AM

கடலுார்: கடலுார் அடுத்த அழகியநத்தம் தென்பெண்ணை ஆற்று கரையோரம், கோல்டன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது.
சங்க தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் சேதுராமன் பொருளாளர் விஜயன் முன்னிலை வகித்தனர். அய்யப்பன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பனை விதை நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இதில், அப்பகுதி முழுவதும் 2,000 பனை விதைகள் நடப்பட்டன.
அப்போது, மாவட்ட தலைவர் தங்கதுரை, உறுப்பினர் புருஷோத்தமன், ராயல் கிளப் சத்திய பாபு, ஊராட்சி தலைவர் முத்துக்குமாரசாமி, துணை தலைவர் நடராஜன், வழக்கறிஞர் வெங்கடேசன், பிரதிநிதி ராஜாராம், முன்னாள் துணைத் தலைவர் சின்ன பொண்ணு பாபு, கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்தரர் ராஜசேகர் மற்றும் அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.