/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் பஞ்சமி வழிபாடு
/
தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் பஞ்சமி வழிபாடு
ADDED : ஜன 05, 2025 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவில், வராஹி அம்மனுக்கு வளர்பிறை பஞ்சமி திதி சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை மூலவர், அம்பாளுக்கு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. மாலை பிரகாரத்தில் உள்ள வராஹி அம்மன் உட்பட சப்த கன்னிகளுக்கு சிறப்பு அபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, வாழை இலையில் அரிசி, பூசணி உள்ளிட்ட பொருட்கள் வைத்து, விளக்கேற்றி பெண்கள் வழிபட்டனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

