/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊராட்சி செயலரை ஆபீசில் வைத்து பூட்டியதால் பரபரப்பு
/
ஊராட்சி செயலரை ஆபீசில் வைத்து பூட்டியதால் பரபரப்பு
ஊராட்சி செயலரை ஆபீசில் வைத்து பூட்டியதால் பரபரப்பு
ஊராட்சி செயலரை ஆபீசில் வைத்து பூட்டியதால் பரபரப்பு
ADDED : ஆக 22, 2025 03:54 AM
சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே ஊராட்சி செயலரை ஊராட்சி அலுவலகத்திற்குள் வைத்து, கிராம மக்கள் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், சிறுபாக்கம் அடுத்த ஜா.ஏந்தல் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் வீடு மற்றும் குடிநீர் வரிகள் செலுத்தினால் மட்டுமே, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணிகளில் வேலை வழங்கப்படும் என தகவல் பரவியது.
இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று ஊராட்சி அலுவலகத்தில் இருந்த ஊராட்சி செயலர் வேல்முருகனிடம் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து, அவரை அலுவலகத்திற்குள் வைத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த மங்களூர் துணை பி.டி.ஓ., மாணிக்கரசி, போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை கிராம மக்கள் ஏற்க மறுத்து ஊராட்சி செயலர் வேல்முருகனை தாக்க முயன்றனர்.
இதனை போலீசார் தடுத்து வேல்முருகனை மீட்டு, கிராம மக்களிடம் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.