/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதுச்சேரியில் 'பந்த்': கடலுாரில் அலைமோதிய பயணிகள்
/
புதுச்சேரியில் 'பந்த்': கடலுாரில் அலைமோதிய பயணிகள்
புதுச்சேரியில் 'பந்த்': கடலுாரில் அலைமோதிய பயணிகள்
புதுச்சேரியில் 'பந்த்': கடலுாரில் அலைமோதிய பயணிகள்
ADDED : செப் 19, 2024 01:05 AM

கடலுார்,: புதுச்சேரியில் முழு அடைப்பு எதிரொலியாக, கடலுாரில் இருந்து தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.
புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும். பிரிபெய்டுதிட்டத்தை கைவிட வேண்டும். மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று காலை 6:00 மணி முதல் புதுச்சேரி மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் புதுச்சேரி மாநிலத்தில் நேற்று தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.
கடலுார் மாவட்டத்தில் இருந்து தினசரி 55 தமிழக பஸ்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இப்போராட்டத்தால் நேற்று புதுச்சேரிக்கு தனியார் பஸ்கள் இயக்கவில்லை. அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் புதுச்சேரிக்கு இயக்கப்பட்டது. போலிஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டது. தமிழக எல்லை வரை கடலுார் போலீசாரும், புதுச்சேரி எல்லையில் அம்மாநில போலீசாரும் அரசு பஸ்களுக்கு பாதுகாப்பாக சென்றனர். தனியார் பஸ்கள் இயக்கப்படாமல், குறைந்தளவு அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் கடலுார் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
இதனால், வேலைக்கு செல்வோர், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் போட்டி, போட்டு பஸ்களில் ஏறி பயணம் செய்தனர். இதனால், கடலுார் பஸ் நிலையத்தில் புதுச்சேரிக்கு சென்ற பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதை தொடர்ந்து மாலை 6:00 மணி முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.