/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் பாண்டியன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
/
குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் பாண்டியன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் பாண்டியன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் பாண்டியன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : ஏப் 04, 2025 05:04 AM

சிதம்பரம்: சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என சட்டசபையில் பாண்டியன் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அவர் பேசியதாவது:
தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சியில், 6 புதிய மாவட்டங்களை உருவாக்கி சாதனை படைத்தவர் முன்னாள் முதல்வர் பழனிசாமி. தி.மு.க., ஆட்சியில் எந்த ஒரு புதிய மாவட்டத்தையும் உருவாக்கவில்லை.
அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அ.தி.மு.க., ஆட்சியின்போது, மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு, இருதய சிகிச்சை நிபுணர், நரம்பியல் நிபுணர் உள்ளிட்ட உயிர் காக்கும் சிகிச்சைகள் பிரிவில் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்.
சிதம்பரம் நகராட்சியின் குப்பை கிடங்கு ஓமக்குளத்தில் உள்ளது.
இங்கு சிதம்பரம் நகராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் கழிவு பொருட்கள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு மலை போல் காட்சியளிக்கின்றன.
இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சமூக விரோதிகள் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் தண்டேசநல்லுார் ஊராட்சி, நான் முனிசிபல் ஊராட்சி, உசுப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட 25,000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், மூச்சு திணறலால் பாதிக்கின்றனர்.
குடியிருப்பு இல்லாத பகுதியில் நகராட்சி குப்பை கிடங்கை மாற்ற வேண்டும். கீழத் திருக்கழிப்பாலை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் பொருட்டு தடுப்பணை கட்டும் பணியை துவக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

