தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருத்தாசலம் கோவில்களில்  பங்குனி உத்திர தேரோட்டம்

 விருத்தாசலம் கோவில்களில்  பங்குனி உத்திர தேரோட்டம்

 விருத்தாசலம் கோவில்களில்  பங்குனி உத்திர தேரோட்டம்


ADDED : மார் 31, 2026 11:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 11:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் பங்குனி உத்திர தேரோட்டம் விமர்சையாக நடந்தது.

விருத்தாசலம் இந்திராநகர் பாலமுருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா, கடந்த மார்ச், 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை, மாலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்து வருகிறது.

முக்கிய நிகழ்வாக, நேற்று காலை பால விநாயகர், பாலமுருகன், பால மாரியம்மன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி தேர்களில் எழுந்தருளினார். பக்தர்கள் வடம்பிடிக்க தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

இதேபோல், கோ.பவழங்குடி சுயம்பு அங்காளம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, தீர்த்தவாரி உற்சவம், விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us