ADDED : ஏப் 02, 2026 05:10 AM

கடலுார்: கடலுாரில் பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் கோவில்களில் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடலுார், கூத்தப்பாக்கம் பாலதண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர விழா நேற்று முன்தினம் விநாயகர் பூஜையுடன் துவங்கியது. நேற்று காவடி பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுகாவடி எடுத்தும், அலகு குத்தியும் முக்கிய வீதிகள் வழியாக வலம்வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து மகா தீபாராதனைநடந்தது. கடலுார் நவநீதம் நகர் சிவசுப்பிரமணியர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும்,காவடி எடுத்தும், பால்குடம் சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். கடலுார் துறைமுகம் கொடிக்கால்குப்பம் சிவசுப்பிரமணிய சுவாமி, புதுக்குப்பம்பாலமுருகன், புருகீஸ்பேட்டை சுப்பிரமணிய சுவாமி உட்பட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.
விருத்தாசலம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 சிவ ஆகம சன்னதியில் உள்ள குமரேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. விருத்தாசலம் மணிமுக்தாற்றில் இருந்து முதனை செம்பையனார் கோவில், குப்பநத்தம் சுப்ரமணியர் கோவில், எருமனுார் சாலையில் உள்ள ஆதி கொளஞ்சியப்பர் கோவில்களுக்கு பக்தர்கள் பால்குடம், இளநீர் காவடி, தாள் காவடி, செடலணிந்து பக்தர்கள் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
