ADDED : ஏப் 03, 2026 05:30 AM

அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவில் வளாகத்தில் உள்ள பால முத்துகுமார சுவாமிக்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
முத்துகுமார சுவாமி சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
மேலும், 50 க்கும் மேற்பட்ட காவடிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்கள் காவடிகள் சுமந்து ஆடியபடி ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.
