
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: திராசுபாளையம் செல்வ விநாயகர் கோவிலில் பங்குனி உத்திர விழா நடந்தது.
பண்ருட்டி அடுத்த திராசுபாளையம் செல்வ விநாயகர் கோவிலில் பாலமுருகன் சன்னதி உள்ளது. இங்கு, பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.தொடர்ந்து பக்தர்கள் திரளாக பங்கேற்று காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.

