தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பண்ருட்டி அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் மனு தாக்கல்

 பண்ருட்டி அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் மனு தாக்கல்

 பண்ருட்டி அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் மனு தாக்கல்


ADDED : ஏப் 06, 2026 09:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 09:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: பண்ருட்டி அ.தி.மு.க., வேட்பாளர் மோகன் கூட்டணி கட்சியினருடன் சென்று நேற்று மனு தாக்கல் செய்தார்.

பண்ருட்டி அ.தி.மு.க., வேட்பாளர் மோகன் நேற்று பிற்பகல் 1:00 மணியளவில், கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பண்ருட்டி தாலுக்கா அலுவலகம் சென்றார். அங்கு, தேர்தல் அலுவலர் கமலத்திடம் மனு தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் தாமோதரன், பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன், பா.ம.க. மாவட்ட தலைவர் கவுரிசங்கர் உடன் சென்றனர். மாற்று வேட்பாளராக மோகன் மனைவி சரளா மனு தாக்கல் செய்தார்.

இதில் மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் கனகராஜ், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, தமிழ்செல்வன், நாகபூஷணம், சிவா, நெல்லிக்குப்பம் நகர செயலாளர் சேகர், தொரப்பாடி பேரூர் செயலாளர் சுரேஷ்,மேல்பட்டாக்கம் அர்ஜூனன், பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பா.ம.க. நகர செயலாளர் ஆனந்த், த.மா.கா. நகர தலைவர் கனகராஜ், கணேசன் , நகர இணை செயலாளர் சத்யாகலைமணி, மாவட்ட ஜெ.பேரவை இணை செயலர் கார்த்திக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின் பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பேசுகையில்; அ.தி.மு.க.வேட்பாளர் மோகனுக்காக, சாதி, மதம் பார்க்காமல் அனைத்து மக்களிடமும் ஓட்டு கேட்கிறோம். தி.மு.க., வினரும், வி.சி., கட்சியினர் தான் சாதி, மதம் பார்த்து பேசுகின்றனர் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us