பண்ருட்டி தொகுதி வி.சி.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
பண்ருட்டி தொகுதி வி.சி.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 19, 2026 11:07 PM

அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டி தொகுதி வி.சி., கட்சி வேட்பாளர் அப்துல்ரஹ்மான் பானை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
பண்ருட்டி தொகுதி வி.சி.கட்சி வேட்பாளர் அப்துல்ரஹ்மான் சாத்திப்பட்டு கிராமத்தில் உள்ள தூய இருதய மேரி அன்னை ஆலயம், பண்ருட்டி-கடலுார் சாலையில் உள்ள ஆற்காடு லுத்தரன் திருச்சபை உள்ளிட்ட இடங்களில் பானை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.அப்போது, 'அவர் தன்னை வெற்றி பெற செய்தால், வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவேன் எனக் கூறி பிரசாரம்' செய்தார்.
நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், வி.சி.கட்சி மாவட்ட செயலாளர் அருள்செல்வன், வெங்கடசாமி, தே.மு.தி.க., நகர செயலாளர் சேகர், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் முகமது காசிம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
