ADDED : மார் 10, 2026 04:59 AM

பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்களின் இயல்புக்கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கினர். கமிஷனர் காஞ்சனா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் துணை சேர்மன் சிவா மற்றும் கவுன்சிலர்கள் பேசியதாவது;
விழமங்கலம் பூங்காவில் பணிகள் முடிவடையவில்லை. சி.சி.டி.வி., கேமரா அமைக்கவில்லை. நான்குமுனை சந்திப்பில் சுகாதார வளாகம் ஏற்படுத்தவில்லை. நகராட்சியில் 70 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பைப் லைன் மாற்றும் பணி நடந்து வருகிறது.
இதில் சிமெண்ட், தார் சாலை நடுவில் உடைத்துவிட்டு அதனை சீரமைப்பது இல்லை. உடைத்த சாலைகளை சீரமைக்க வேண்டும். தெரு நாய் அதிகரிப்பதை கட்டுபடுத்த வேண்டும், தனியார் செப்டிக் டேங்க் கிளினிங் லாரிகள் கழிவுநீரை வாலாஜா வாய்க்காலில் கொட்டுகின்றனர். இதனை தடுக்க வேண்டும் என கூறினர்.
நகராட்சி சேர்மன் ராஜே ந் திரன் பேசுகையில்; பண்ரு ட்டி நான்குமுனை சந்திப் பில் கழிப்பறை கட்டப்படும். மினி ஸ்டேடியத்திற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும். வாய்க்காலில் கழிவு நீர் கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
