/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலக கண்ணாடி உடைப்பு
/
பண்ருட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலக கண்ணாடி உடைப்பு
ADDED : செப் 20, 2025 07:00 AM

பண்ருட்டி : பண்ருட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலக கண்ணாடியை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி தாலுகா அலுவலக வளாகத்தில் பண்ருட்டி குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.
இங்கு, வேணுகோபால் என்பவர், வருவாய் ஆய்வாளராக பணிபுரிகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு பணிகளை முடித்து விட்டு 9:00 மணிக்கு அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றார்.
நேற்று காலை 9:00 மணிக்கு வழக்கம் போல் அவர் அலுவலகத்தை திறக்க வந்தார். அப்போது, அலுவலக கண் ணாடிகள், மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருப் பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து கண்ணாடியை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.