/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி செந்தமிழ் சங்கம் முப்பெரும் விழா
/
பண்ருட்டி செந்தமிழ் சங்கம் முப்பெரும் விழா
ADDED : ஜன 09, 2024 06:53 AM

பண்ருட்டி : பண்ருட்டி செந்தமிழ் சங்கம் சார்பில் பொங்கல் விழாவையொட்டி முப்பெரும் விழா நேற்று நடந்தது.
பண்ருட்டி செந்தமிழ் சங்கம் சார்பில் பொங்கல் விழா ,பாரதியார் பிறந்த நாள், நாள்காட்டி வெளியீட்டு விழா, என முப்பெரும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு எஸ்.வி. ஜீவல்லர்ஸ் உரிமையாளர் வைரக்கண்ணு தலைமை தாங்கினார். சங்கபொதுச் செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். அமைப்புச்செயலாளர் அசோக்ராஜ், கல்வி மேம்பாட்டுப் செயலாளர் செந்தில்குமார், நாட்டுப்புற கலைமேம்பாட்டுச் செயலாளர் வினோத் முன்னிலை வகித்தனர்.
சங்கத் தலைவர் சுந்தர பழனியப்பன் சிறப்புரையாற்றினார். கவுரவத் தலைவர் வைரக்கண்ணு சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார். சங்க நாள்காட்டியை புவனகிரி மோகன்தாஸ் , புதுச்சேரி தமிழர் சான்றோர் பேரவை தலைவர் நாடன் ஆகியோர் வெளியிட்டனர்.
மாணவர் பிரசன்னசிவா, பாரதியார் பாடல்களை பாடியும், ஸ்ரீகாந்த் சிவா வயலினும் வாசித்தனர். பேராசிரியர் தமிழ் முல்லை தலைமையில் புதுச்சேரி அசோகன் , கவிஞாயிறு முருகு.மணி, புதுச்சேரி பாவலர் லோகநாதன், பாண்டு, தங்கவேலு, .மகாவிஷ்ணு, கிருஷ்ணன்,பொங்கலுக்கு பயன்படும் பொருட்கள் என்ற தலைப்பில் கவிதை வாசித்தனர். முடிவில் பொருளாளர் சுதாகரன் நன்றி கூறினார்.