/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி நகராட்சியில் இணைக்கக்கூடாது: இரு ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றம்

ADDED : ஜன 27, 2025 06:18 AM

பண்ருட்டி; பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் எல்.என்.புரம், பூங்குணம் ஆகிய இரு ஊராட்சிகளை பண்ருட்டி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கிராமசபைகூட்ட புறக்கணிப்பு முடிவு குறித்து தாசில்தார் ஆனந்த் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம், எல்.என்.புரம் பூங்குணம் ஆகிய இரு ஊராட்சிகளை பண்ருட்டி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று குடியரசு தினவிழாவை முன்னிட்டு நடந்த இரு கிராமசபைக்கூட்டத்தை பொது மக்கள் புறக்கணிப்பு செய்து வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏற்றி வைத்தனர்.
தகவலறிந்த பண்ருட்டி தாசில்தார் ஆனந்த் இரு கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில், ஊராட்சியை பண்ருட்டி நகராட்சியுடன் சேர்க்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதனையடுத்து இரு ஊராட்சியினரும் கருப்பு கொடிகள் கழற்றினர்.
பின் கிராமசபைக்கூட்டம் பின் நடந்தது. இரு கிராமசபைக்கூட்டத்திலும் பண்ருட்டி நகராட்சியுடன் இணைக்ககூடாது என எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.