ADDED : மார் 24, 2026 11:07 PM

அ நிறம் | அளவு
வேப்பூர்: வேப்பூரில் துணை ராணுவப்படை வீரர்கள், போலீசாருடன் இணைந்து, கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர்.
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதனையொட்டி, பொது மக்களிடையே அச்சத்தை போக்கி, 100 சதவீதம் ஓட்டளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திட்டக்குடி டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில், வேப்பூர் கூட்டுரோட்டில், திருச்சி மார்க்க சர்வீஸ் சாலை, விருத்தாசலம் சாலை ஆகிய பகுதிகளில், 50 துணை ராணுவப்படை வீரர்களுடன், போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
மேளதாளங்களுடன் ஒலிப்பெருக்கி மூலம், 100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி பொதுமக்கள், வியாபாரிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது, வேப்பூர் இன்ஸ்பெக்டர் பழனிசாமி, சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
